மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏலேய்.. நீ ஒரு ஆர்ட்டிஸ்ட் னு நிரூபிச்சிட்டடா.. உடைந்த காரின் மிரருக்கு அசரவைக்கும் முட்டு.. உருட்டிய கார் ஓட்டுநரின் வைரல் க்ளிக்ஸ்.!
நம்மிடம் ஒரு பொருள் இல்லை என்றால், அவசர தேவைக்கு அதற்கு ஈடாக எந்த பொருளையாவது பயன்படுத்தி காரியத்தை நிறைவு செய்வது மனிதரின் சாமர்த்தியம். இதில், நம்ம ஊரவர்களுக்கு சாமர்த்தியத்தில் ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்.
ஏனெனில், அவர்களின் அவசர மாற்று சேவை காண்போரை வியக்கவைக்கும் வகையில் இருக்கும். இப்படியான ஒரு சம்பவம்தான் இன்றைய தலைப்பாக மாறியுள்ளது.
கார்களில் பின்புறம் வரும் வாகனங்களை பார்க்க கண்ணாடி காரின் இருபுறமும் இருக்கும். இதில் ஒரு பக்க கண்ணாடி உடைந்துவிட்டால், அதனை மாற்றுவது இயல்பு. இங்கு ஒரு வாகனஓட்டி காண்போரை வியக்கவைக்கும் வகையில் செய்துள்ள அமைப்பு தான் அம்சமே.
அதாவது, காரின் வலப்புற கண்ணாடி உடைந்துவிட்ட நிலையில், அந்த இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தி கட்டிவைத்துள்ள வாகன ஓட்டுநர், அதனை வைத்து பின்னால் வரும் வாகனத்தின் நிலையறிந்து செயல்படுகிறார்.
இந்த கார் தென்காசி நகரில் சாலையில் சென்றபோது, அவ்வழியே சென்றவர்கள் இதனை போட்டோ எடுத்து பதிவு செய்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதனைக்கண்ட பல நெட்டிசன்களும் "இருக்குற அறிவாளியெல்லாம் தமிழகத்துல இருக்கானுங்க., தெர்மாகோலையே மிஞ்சிட்டாங்க" என விமர்சனம் செய்து வருகின்றனர்.
சிலர் அவர் கண்ணாடியை பொறுத்த காரை எடுத்து சென்றுகொண்டு இருக்கலாம். அதுவரை விபத்து ஏற்படாமல் இருக்க இவ்வாறு மாற்று கண்ணாடியை உபயோகம் செய்திருக்கலாம். அவர் சாமர்த்தியசாலி என்றும் கூறி வருகின்றனர்.