96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திருச்சி மருத்துவமனையில் பதற்றம்.... ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த கும்பல்... காவல்துறை சுற்றி வளைப்பு.!
திருச்சியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தாக்க ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நபர்களால் அங்கு பதற்றம் நிலவியது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் உறையூர் சோழராஜபுரம் பகுதியில் இருதரப்பினரிடையே சில தினங்களுக்கு முன்பு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த முதலில் காயமடைந்த தமிழரசன் மற்றும் அருண்பாண்டியன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களைத் தாக்கும் நோக்குடன் நவீன், முருகானந்தன், விக்கி மற்றும் ஐயப்பன் ஆகிய நான்கு பேர் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சுற்றி வந்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
காவல்துறை வருவதை அறிந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. அப்போது ஐயப்பன் என்பவரை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.