3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
சேலத்தில் பள்ளிக்குச்சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.! மூடப்பட்ட பள்ளி.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு முடிவுகளை மேற்கொள்ள உள்ளதாக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனாலும் சக மாணவர்களும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளி மூடப்பட்டுள்ளது. அந்த மாணவருக்கு பள்ளியில் கொரோனா பரவவில்லை என்றும், கிராமத்திலிருந்தபோதே அவருக்கு தோற்று ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.