#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அதை மட்டும் விட்ருங்கப்பா..." 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை... தந்தைக்கு உருக்கமான வேண்டுகோள்!
தந்தை தனது குடி பழக்கத்தை கைவிடாததால் மனம் வெறுத்து விரக்தியில் இருந்த மகள் அவருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜகுப்பம் பகுதியை சார்ந்தவர் பிரபு இவர் கூலி வேலை செய்து வருகிறார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவரது மகள் விஷ்ணு பிரியா வயது 16. குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தந்தை அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்வதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்திருக்கிறார் விஷ்ணு பிரியா. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து விஷ்ணு பிரியாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையின் போது விஷ்ணு பிரியா கடைசியாக எழுதி வைத்த தற்கொலை கடிதம் கிடைத்திருக்கிறது. அதில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது தந்தை குடிப்பழக்கத்தை கைவிட்டு குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.