#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதியின் 'விலையில்லா விருந்தகம்' பள்ளி மாணவர்கள், முதியோர் பசி நீக்கி அசத்தும் விஜய் ரசிகர்கள்.!
தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கென இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் இவரது படம் வெளியாகும் நாட்கள் மற்றும் இவரது பிறந்தநாளை கோலாகலமாக திருவிழாவை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தற்போது, விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து பிகில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தளபதி விஜய் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயனளிக்கும் செயலை செய்து வருகிறார். அதன்படி, இந்தாண்டு பிறந்த நாளில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இவரது ரசிகர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
இதனை அவரது ரசிகர்களே முதலீடு செய்து, மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இதற்கு “விலையில்லா விருந்தகங்கள்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் இலவச உணவு வழங்கி வருகின்றனர்.
சென்னை, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் “விலையில்லா விருந்தகங்கள்” ஏற்படுத்தி செயல்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை ஓராண்டிற்கு செயல்படுத்த விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.