#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எங்களுக்கு சீட் தராவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் எங்கள் ஆதரவு திமுக வுக்குத்தான்.. முக்கிய கட்சி அறிவிப்பு..
தங்களுக்கு சீட் தராவிட்டாலும், தங்கள் ஆதரவு திமுகவிற்குத்தான் என அறிவித்துள்ளார் தமிமுன் அன்சாரி.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி உடன்பாடு குறித்து கவனம் செலுத்திவருகிறது. ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து முடிவு செய்துவிட்ட நிலையில் விரைவில் தொகுதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளிவர உள்ளது.
இந்நிலையில் கடந்த தேர்தலில் அதிமுக அணியில் சேர்ந்து வெற்றிப்பெற்ற மஜக கட்சித்தலைவர் தமிமுன் அன்சாரி இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக தமிமுன் அன்சாரி திமுக கூட்டணியில் இணைந்து இடம் கேட்ட நிலையில் பின்னர் விலகினார்.
இந்நிலையில் திடீரென திமுக கூட்டணிக்கு மீண்டும் தனது ஆதரவை அளித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியிலிருந்து விலகி மனித நேய ஜனநாயக கட்சி என்கிற கட்சியைத் தொடங்கிய தமிமுன் அன்சாரி அதிமுக கூட்டணியில் இணைந்தார்.
பின்னர் நாகை தொகுதியில் நின்று வெற்றியும்பெற்றார். இந்நிலையியல் தற்போது அவர் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவை திமுகவிற்கு தருவதாக. தெரிவித்துள்ளார்
ஆனாலும் அவருக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாவிட்டாலும், பாசிச, சமூக நீதி சக்திகளுக்கு எதிரான வாக்குகள், மதச்சார்பின்மைக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போய்விடக்கூடாது என்கிற உன்னத லட்சியத்தை கட்டிக்காப்பாற்ற வேண்டிய முடிவை நாங்கள் எடுத்துள்ளதால் தங்கள் ஆதரவை திமுகவிற்கு தருவதாக அவர் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.