#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
12 வயது சிறுமிக்கு ஸ்னாக்ஸ்... 52 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
12 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வழக்கில் 52 வயது கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி(52) இவர் கரும்பு வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தங்கப்ப உடையான்பட்டியில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தன்னுடன் பணியாற்றிய பெண்ணின் 12 வயது மகளுக்கு தின்பண்டங்களை வாங்கி கொடுத்து பாசமாக பழகி வந்திருக்கிறார்.
சில நாட்கள் கழித்து அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனை சென்று பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது குறித்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெய்வசிகாமணி தின்பண்டங்களை வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் மீது தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் தெய்வசிகாமணி தான் குற்றவாளி என விசாரணையின் மூலம் கண்டறிந்து அவருக்கு எதிராக தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன் குற்றம் சாட்டப்பட்ட தெய்வ சிகாமணிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று லட்ச ரூபாய் வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.