மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தென்னந்தோப்பில் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம்: தஞ்சையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் வசித்து வருபவர் அபினேஷ் (வயது 21). அங்குள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தை, அபினேஷ் காதலாக மாற்றியதாக தெரியவருகிறது.
கயவனின் எண்ணம் தெரியாமல் சிறுமியும் அபினேஷை கண்மூடித்தனமாக உலகமென நம்பி இருக்கிறார். இதனிடையே, கடந்த டிசம்பர் 19ம் தேதி சிறுமியை அபின்ஸ் அங்குள்ள தென்னந்தோப்பு பகுதிக்கு அழைத்து சென்று இருக்கின்றனர்.
அங்கு இருவரும் தனிமையில் பேசிக்கொண்டு இருக்க, சிறிது நேரத்தில் அபினேஷின் நண்பர்கள் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 21), ஸ்ரீ தரன் (வயது 24), திருவாரூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (வயது 21) ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
பதறிப்போன சிறுமி செய்வதறியாது திகைத்து தப்பிச்செல்ல முயற்சிக்க, காதல் வார்த்தை பேசி அன்போடு அழைத்துச்சென்ற கயவன் மற்றும் அவனின் நண்பர்கள் சேர்ந்து சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த துயரத்தை அரவிந்தன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
விடியோவை தனது நண்பர் ராகுல் (வயது 24) என்பவருக்கு அவர் அனுப்பவே, விடியோவை பார்த்த ராகுல், தனது நண்பர்களுக்கும் அதனை பகிர்ந்து இருக்கிறார். இதனையடுத்து, வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் மாணவியின் அடையாளத்தை கண்டறிந்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, சிறுமி மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் பெற்ற புகாரையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகள் ஐவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி விசாரணை நடந்து வருகிறது.