மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking : கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சுற்றுலாப்பயணிகள் 2 பேர் பலி.. 4 பேரின் நிலை?..! கண்ணீரில் உறவினர்கள்.!
பூண்டிமாதாவை வழிபட வந்த 6 பேர் கொள்ளிடம் ஆற்று நீரில் மூழ்கிய நிலையில், 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 4 பேரின் நிலைமை தெரியவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ், பிரவீன் ராஜ், பிரித்வி ராஜ், ஜாவின், ஈசாக், தெர்மாஸ் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் அங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த நிலையில், ஆற்றில் மணல் அள்ளப்பட்டுள்ள்ள விவகாரம் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து 6 பேரும் நீரில் மூழ்கிய நிலையில், விஷயம் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சார்லஸ், பிரவீன் ராஜ் ஆகியோரின் உடலை மீட்டனர்.
எஞ்சியுள்ள 4 பேரின் நிலைமை தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர்களும் ஆற்று நீரில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தஞ்சாவூருக்கு விரைந்துகொண்டு இருக்கிறார்கள்.