மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார கணவனுடன் தினமும் நிம்மதியில்லா வாழ்க்கை; கணவனை குடும்பத்தோடு சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்பிரபு (வயது 42). இவர் தச்சுத்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வந்தவாசி பகுதியை சேர்ந்த கவிதா (வயது 29) என்ற பெண்மணியை, 2009ல் வேலைக்கு சென்றபோது காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தம்பதிகளுக்கு விஸ்வேஷ் பிரபு (வயது 13), நவநீதி (வயது 8) என்ற மகளும் இருக்கின்றனர். இதனிடையே, மதுப்பழக்கத்திற்கு அடிமையான செந்தில், தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த மே 2 ம் தேதியும் சண்டை நடந்துள்ளது.
இதனால் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்ற கவிதா, அவரின் தாய் கசியம்மாள் (வயது 52), சகோதரர் சந்தோஷ் (வயது 25), அக்கா சாந்தி (வயது 32) ஆகியோருடன் சேர்ந்து பிரபுவை கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்துள்ளார்.
இந்த செந்திலை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு, சாந்தி வழக்கம்போல உறங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கவிதா கணவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த வந்தவாசி தெற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்த நிலையில், அவர்கள் செந்தில் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
பிரேத பரிசோதனை முடிவில் எப்படியும் அதிகாரிகள் உண்மையை அறிந்துவிடுவார்கள் என்பதை புரிந்துகொண்ட கவிதா, கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். அவரிடம் நடந்த விசாரணையில் குடிபோதையில் கணவர் தினம் சண்டையிட்டு வந்ததால் விரக்தியில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணைக்கு பின்னர் கவிதா, காசி, சாந்தி, சந்தோஷ் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.