மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளித்தோழியை நள்ளிரவில் சந்திக்கச்சென்ற சிறுவன் புது மாப்பிள்ளையாக மாற்றம்.. நள்ளிரவில் பிப்பிப்பி., டும்., டும்., டும்..!
தனது பள்ளி தோழியை இரவில் பார்க்க சென்ற சிறுவனுக்கு சிறுமியுடன் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தோழியின் மீது கொண்ட ஆசையால் இரவு நடந்த கலவர திருமணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம், ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 17 வயதுடைய மாணவர் பயின்று வருகிறார். இவரோடு 16 வயது சிறுமியும் பயின்று வருகிறார். இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக சேர்ந்து அரட்டை அடிப்பது, நண்பர்களுடன் சிரித்து விளையாடுவது என இருந்து வந்த நிலையில், இருவருக்குள்ளும் சினிமா மோகத்தால் காதல் மலர்ந்ததாக நண்பர்கள் கம்பி கட்டும் கதையை அளந்துவிட்டுள்ளனர்.
கம்பி கட்டகூட தெரியாத அந்த தம்பியோ, கம்பியை முடித்துப்போடும் விதமாக பள்ளிக்காதல் திரைக்காட்சியால் வயப்பட்ட தன்னைப்போல, 16 வயது சிறுமியிடமும் காதலை தெரிவித்து, அவரையும் காதல் வயப்படவைத்துள்ளார். அவ்வப்போது, தனது தோழியை காண சிறுவன் நள்ளிரவு நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு செல்வது தான் வழக்கம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷயம் சிறுமியின் உறவினர்களுக்கு தெரியவரவே, சம்பவத்தன்றும் தனது தோழியை காண சிறுவன் ஊருக்கு ஆசை ஆசையாக புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே தயாராக இருந்த உறவினர்கள் சிறுவனை விடாப்பிடியாய் பிடித்துக்கொள்ள, உடனடியாக சிறுவன் - சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. இருவருக்கும் உடைகள் மாற்றப்பட்டு, மணக்கோலத்தில் ஊரில் உள்ள கோவிலில் வைத்து அவசர கட்டாய திருமணம் நடந்துள்ளது. ஆட்டுரலுக்குள் சிக்கிய ஆட்டம் புழுக்கையாக அகப்பட்ட சிறுவனும், காதலியின் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார்.
இந்த விஷயம் எப்படியோ காவல் துறையினரின் காதுகளுக்கு சென்றுவிட, விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அக்கரைவட்டம் பகுதியை சார்ந்த ராஜா, அய்யாவு, ராமன், நாடிமுத்து, கோபு, கண்ணையன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
பள்ளி காதலோ, பருவம் அடைந்த பின்னர் வரும் காதலோ, எதுவாக இருந்தாலும் சுத்தரிப்பு இல்லை என்றால் என்ன வேண்டும் என்றாலும் நடக்கும்.