மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கரண்ட் கம்பத்தில் மோதிய கார்!!.. இருளில் மூழ்கிய நகரம்: நள்ளிரவில் பரபரப்பு..!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வந்த கார் திடீரென மின் கம்பத்தில் மோதியதில் அப்பகுதியே இருளில் மூழ்கியது.
திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையத்தின் அருகேயுள்ளது வ.உ.சி சாலை. நேற்று இரவு இந்த வழியாக திருச்சி மாவட்டம், கிராப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 45 வயதுள்ள நபர் காரில் வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமான குடி போதையில் கார் ஓட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திடீரென சாலை ஓரத்தில் இருந்த அடுத்தடுத்த மின்கம்பங்களில் அவர் ஓட்டி வந்த கார் மோதியுள்ளது. இதன் காரணமாக அந்த 2 உயர் மின்னழுத்த கம்பங்களும் சாலையின் குறுக்கே விழுந்தன. இதனையடுத்து, அந்த பகுதி முழுவதும் சுமார் 200 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குடி போதையில் கார் ஓட்டிய நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் கிராப்பட்டி கிராமத்தில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்காக காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்த காவல்துறையினர், குடி போதையில் வாகனம் ஓட்டியது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், சுமார் 1 மணி நேரம் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.