வங்கி மேலாளர் வீட்டில் கைவரிசை..62 பவுன் நகைகளை அள்ளி சென்ற மர்ம கும்பல்.. போலீஸ் வலை வீச்சு..!



The bank manager's house was raided.. The mysterious gang took away 62 pounds of jewelry.. The police laid a net..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவர் தேனி மாவட்டம் தமிழ்நாடு மெர்கன்டையல் வங்கி கிளையில் உதவி மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் சந்திரமோகன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடந்த திங்கட்கிழமை வீட்டை போட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இவர்களது வீட்டில் உள்ள பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பணியாளர் வந்து செல்வது வழக்கம். இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று வழக்கம்போல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக பணியாளர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு  பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சந்திரமோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Jewellery stolen

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் வீட்டிலிருந்த 62 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.