திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இளம் பெண்ணை பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர்.. இதையெல்லாம் கண்டுக்காதே என்று கூறிய கணவன்.. உடந்தையாக இருந்த மாமனார் மாமியார்.. தட்டி தூக்கிய போலீஸ்.!
திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர்கள் சீனிவாசன் - செல்வி தம்பதியினர். செல்வி செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவரது கணவர் சீனிவாசன் பாஜகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் சீனிவாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பேயலாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ராமஜெயம் என்பவர் தனது மனைவி, 2 குழந்தைகள், தாய் மற்றும் தந்தையுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்போது சீனிவாசன் ராமஜெயத்தின் மனைவியிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து ராமஜெயத்திடம் அவரது மனைவி கூறியுள்ளார். அப்போது அவரது கணவர், மாமியார் மற்றும் மாமனார் நிலத்தின் உரிமையாளர் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்துகொள் என்று கூறி வற்புறுத்தி உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளம் பெண்ணை சீனிவாசன் வலு கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கு அந்த இளம் பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக பிரமுகர் சீனிவாசன் அவருக்கு உடந்தையாக இருந்த ராமஜெயம் அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.