96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆற்றில் மிதந்து வந்த இளம் பெண்ணின் சடலம்; பதறிய மீனவர்கள்: குழம்பும் காவல்துறை..!
ஒகேனக்கல் ஆற்றில் கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் இளம்பெண் ஒருவரின் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. அந்த ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், ஆற்றில் சடலம் மிதந்து வந்தது குறித்து ஓகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த ஓகேனக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீனவர்களின் துணையுடன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மிதந்து வந்த பெண்ணின் சடலம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் தர்மபுரியிலுள்ள நெல்லி நகர் அருகே மாந்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியரான ராஜேந்திரன் என்பவரது மகள் பிரியங்கா (22) என்பது தெரிய வந்தது. இவர் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரியங்கா மாயமானதும், அது குறித்து அவரது பெற்றோர் தர்மபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பிரியங்காவின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரியங்கா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.