மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாதவரம் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த திருநங்கையின் உடல்... அதிர்ச்சி சம்பவம்..!!
கைகளைக் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்த திருநங்கையின் உடல்.
சென்னை மாதவரம் அருகே 200 அடி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள லேத் பட்டறை அருகே, மணலியை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.
பின்னர் அந்த லாரியை எடுக்க வந்த போது லாரியின் அருகே திருநங்கை ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழுத்தில் துப்பட்டாவால் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர், இது குறித்து பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
காவல்துறையினர் திருநங்கை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பல கோணங்களில் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.