ஓசியில் சரக்கு கேட்டு ரகளை.. விற்பனையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள் கைது.!



The boy who thereatend for free alcohol

இலவசமாக மதுபானம் கேட்டு ரகளை செய்த இளைஞர்களுக்கு மது கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், தேவூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாஸ்கர் (வயது 50). இவர் தேவூரில் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மதியம் எறும்புக்கண்ணி கிராமத்தை சேர்ந்த புகழேந்திரன், பட்டமங்கலத்தை சேர்ந்த அஜித் மதுபான கடைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பாஸ்கரிடம் கத்தியை காண்பித்து இலவச மதுபானம் கேட்டு தகராறு செய்துள்ளனர். பாஸ்கரும் மதுபானம் தரமருத்து கண்டித்து இருக்கிறார். ஓசியில் மதுகேட்டவர்கள் அங்கிருந்து சிறிது நேரத்தில் புறப்பட்டு சென்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம்

இந்த விஷயம் குறித்து கடையின் மேற்பார்வையாளர் விஜயகுமார் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த புகழேந்திரன் மற்றும் அஜித், பாஸ்கரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தீ மற்றும் பாட்டில் வீச்சு சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து பாஸ்கர் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி அஜித், புகழேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்தனர்.