மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருமகளை கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு துரத்திய குடும்பத்தினர்... 3 நாட்கள் பஸ் ஸ்டாண்டில் தங்கியிருந்த சோகம்...!
பேருந்து நிலையத்தில் இரு குழந்தைகளுடன் பசியால் தவித்து வந்த இளம் பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீரப்பட்டி கிராமத்தில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த பிரசாந்த், கடந்த நான்கு வருடங்களுக்கு முன் கட்டிட வேலைக்காக குடியாத்தம் சென்றிருந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு தர்ஷன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு பிரசாந்தின் தாய், கீதாவை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர். அவர்கள் செய்த கொடுமையை பொறுக்க முடியாத கீதா இரண்டு வருடங்களுக்கு முன் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், மாமியாரின் கொடுமை அதிகமாகி வரதட்சணையுடன் வா என்று கைக்குழந்தையுடன் கீதாவை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
சிறுது காலம் கழித்து மீண்டும் பிரசாந்த் கீதா இருவரும் பேசி முடிவு எடுத்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதில் தற்போது கடந்த 20 நாட்களுக்கு முன்பு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், கீதாவின் மாமியார் மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்த தொடங்கியுள்ளார். மேலும், வரதட்சணை கொடுத்தால் மட்டுமே கணவருடன் வாழ முடியும் எனக்கூறி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
மனமுடைந்த கீதா மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், மறுபடியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கீதா குழந்தைகளுடன் மூன்று நாட்களாக பேருந்து நிலையத்திலேயே தங்கியுள்ளார்.
இரு குழந்தைகளும் பசியால் தவித்து வந்ததை கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், அந்த பெண் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் உணவு போன்றவற்றை கொடுத்து உதவினர்.
இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கீதா மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டு சென்றனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது என அந்த பெண் வேதனையுடன் தெரிவித்தார்.