மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டி கொலை... 3 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்...!!
செங்குன்றம் அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை செங்குன்றத்தின் அருகே உள்ள விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் அஸ்வின் (28). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. உயிர் பயத்தில் கடந்த சில மாதங்களாக உயிர் பயத்தில், புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், அஸ்வின் குடும்பத்துடன் உறவினர் வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
பின்னர், அஸ்வின் பைக்கில் தனியே வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அஸ்வினை வழிமறித்தது. வண்டியை அங்கேயே போட்டுவிட்டு ஓடினார் அஸ்வின். ஆனால், அந்த கும்பல் விடாமல் அஸ்வினை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.
இதில், படுகாயமடைந்த அஸ்வின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வின் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தியதில் பழிவாங்குவதற்காக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வேலு (22), வினோத்குமார் (24), சரத்குமார் (20) ஆகிய மூன்று பேரையு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.