மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே... மனைவியுடன் சேர்ந்து வாழ வற்புறுத்திய தந்தை.... உருட்டு கட்டையால் அடித்துக் கொலை.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழ வற்புறுத்திய தந்தையை மகன் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கொலையாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மேல சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் வயது 55. இவரது மனைவி வைரம் (50). இவர்களுக்கு சதீஷ்குமார் (31), திருநாத் (28), சோமசுந்தரம் (எ) அலெக்ஸ்(27) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்குமார் மற்றும் திருநாத்திற்கு திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகன் சோமசுந்தரம் சென்னையில் தங்கி பணியாற்றி வருகிறார்.
இவரது இரண்டாவது மகன் திருநாள் மற்றும் அவரது மனைவி மேலமுத்துகாடு பகுதியில் வசித்து வருகின்றனர். முதல் மகன் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி ரஞ்சனி பெற்றோருடன் வசித்து வந்தனர். சதீஷ்குமாருக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது மேலும் 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சதீஷ்குமார் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தந்தை சந்திரமோகன் மனைவியுடன் சேர்ந்து வாழும்படி அடிக்கடி வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் தந்தை மற்றும் மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சந்திரமோகனின் மனைவி வைரம் திருவிழாவிற்கு சென்றிருந்ததால் வீட்டில் சந்திரமோகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது மகனை மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் வற்புறுத்தவே ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அருகிலிருந்த கட்டையால் அடித்து தந்தையை கொலை செய்திருக்கிறார். இது தொடர்பாக தகவலறிந்த புதுக்கோட்டை காவல் துறையினர் சந்திரமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையை கொலை செய்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.