#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாய் இறந்ததை மறைத்து மகள்களை தேர்வுக்கு அனுப்பிய தந்தை.! வீட்டிற்கு வந்து கதறி அழுத மகள்கள்.!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி முத்துமாரி ஆடு மேய்க்கும் வேலையை செய்து வந்துள்ளார். பெரியசாமி-முத்துமாரி தம்பதியின் மகள்கள் வானீஸ்வரி, கலாராணி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்துமாரி ஆடுமேய்க்க சென்றபோது, கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனையடுத்து தனது மகள்கள் வானீஸ்வரி மற்றும் கலாராணி ஆகியோரிடம் தாய் முத்துமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெரியசாமி கூறியுள்ளார். முத்துமாரி இறந்ததை மகள்களிடம் மறைத்த தந்தை தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி மறுநாள் தேர்வு எழுத அனுப்பி வைத்துள்ளார்.
தேர்வு முடிந்து வீடு திரும்பும் போது தாய் இறந்தது தெரிய வந்ததும் மாணவிகள் கதறி அழுதுள்ளனர். வீட்டிற்கு வந்த பிறகு தான் தாங்கள் தேர்வெழுத வேண்டும் என்பதற்காக தங்கள் தந்தை அவ்வாறு கூறி அனுப்பி வைத்ததை மாணவிகள் அறிந்துள்ளனர். மாணவிகள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை கலங்க வைத்தது.