53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
குடும்ப தகராறில் தனது மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தை.. ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவர் தனது மனைவி ராதா மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018-ம் முனியப்பன் மற்றும் ராதா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமுற்ற முனியப்பன் தனது இரண்டு மகன்களையும் கிணற்றில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் கணவரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த ராதா கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியோடு தன் மகன்களை கிணற்றில் இருந்து மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இளைய மகன் தீபக் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மூத்த மகன் ரூபன் சிகிச்சைக்கு பின் நலமடைந்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக ராதா காவல்துறையினரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் முனியப்பன் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் இந்த வழக்கானது நிலுவையில் இருந்த நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் முனியப்பனின் குற்றத்திற்காக 15 ஆயிரம் அபராதமும் ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.