திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேலியே பயிரை மேய்ந்தது.. மகள்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த தாயின் இரண்டாவது கணவர்..!
திருநின்றவூரில் ஒரு பெண் தனது இரண்டாவது கணவர் ராமமூர்த்தி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் முதல் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து தனது மகள்களுடன் வாழ்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு முன் ராமமூர்த்தி என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராமமூர்த்தி கடந்த சில நாட்களாக தனது மகள்களிடம் அத்துமீறி நடந்து பாலியல் சீண்டல் தருவதாக அந்த பெண் பட்டாபிராம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ராமமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் காவல் துறையினர் ராமமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.