பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மாணவி நந்தினியின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!!
600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் மாணவி நந்தினி.
நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியானது. திண்டுக்கல் மாணவி நந்தினி பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மாணவி நந்தினி இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று மாணவி நந்தினி தெரிவித்துள்ளார்.