மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பிரச்னை! இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு!
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள ஒரு கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், குணமடைந்த 3 வாரங்கள்வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வேகமாக குறைந்தது. 60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள்வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடித்துள்ளது.
3 மாதத்தில் பெரும்பாலான நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது. சிலருக்கு முற்றிலுமாக போய்விட்டது. இவ்வாறு குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது, மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உடலில் உருவாகும் ஆன்டிபாடிகள் சில வாரங்களிலேயே மறைந்துவிடும் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸால் மிக லேசாக பாதிக்கப்பட்டவர்கள் அதாவது கொரோனா தொற்றில் சிறிய அறிகுறிகள் மட்டுமே தென்பட்டவர்களுக்குக்கூட நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது ஆனால் அது சில வாரங்களுக்குள்ளாகவே மறைந்துவிடுகிறது என்பதை விஞ்ஞானிகள் அந்த ஆய்வில் கண்டிபிடித்தனர். எனவே நாம் அனைவரும் விழிப்புடன் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும்.