96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கள்ளக்காதல் விவகாரம்.. தங்கையின் கணவருக்கு முந்தானை விரித்த பெண் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை.!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நல்லமநாயக்கன்பட்டியில் கணவரை இழந்த சின்னதங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த சூழலில் கணவரை இழந்து வசித்து வந்த சின்னதங்கம் தனது தங்கையின் கணவரான பாலு என்பவருடன் தகாத உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு தலைக்கேறிய மதுபோதையில் சின்னதங்கத்தின் வீட்டிற்கு வந்த பாலு அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மனம் உடைந்து போன சின்னதங்கம் இரவு அனைவரும் உறங்கியபின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் காலை எழுந்து பார்த்த பாலு சின்னதங்கம் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பாலுவுடன் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக சின்னதங்கம் தற்கொலை செய்து கொண்டதையடுத்து போலீசார் பாலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.