மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலிப்பதாக நடித்து உல்லாசம் அனுபவித்த வழக்கறிஞர்.. லாயரை 'லா'வால் மடக்கி சிறையில் அடைத்த சம்பவம்.!
காதலிப்பதாக நடித்து உல்லாசம் அனுபவித்ததோடு வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு தயாரான வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருடன் சட்டக்கல்லூரியில் படித்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரும் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வழக்கறிஞரான அந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகியதோடு, அவருடன் தனிமையில் இருக்கும் போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். திடீரென்று அப்பெண்ணிடம் பேச்சை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அவர் முரளியிடம் பேச முயற்சி செய்யும் போதெல்லாம், அவரை விட்டு விலகி சென்றுள்ளார். இதற்கிடையில், முரளி மீது சந்தேகமடைந்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முரளியிடம் கூறியதாக தெரிகிறது. அதற்கு பதிலளித்த முரளி, நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண், என் குடும்பத்தில் உன்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிதாக தெரிகிறது.
நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் என்பது இப்போதுதான் உனக்கு தெரிகிறதா? என்னுடன் உல்லாசமாக இருக்கும் போது அது தெரியவில்லையா? என்று அந்த பெண் ஆவேசமாக கேட்டதாகவும், இதன் காரணமாக அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் முரளிக்கு வேறு ஒரு பெண்ணுடன் திடீரென்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த தகவலை அறிந்த அந்தப் பெண் உடனே பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்கறிஞர் முரளி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் .