திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆசையாய் தந்தையுடன் கோயிலுக்கு சென்ற சிறுமி.. தந்தை கண்முன் அரங்கேறிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!
ராணிப்பேட்டை, சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பில்லாஞ்சி பகுதியில் சங்கர் என்பவர் தனது மனைவி மற்றும் மகள் பிரியாவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவதன்று பிரியா(15) தனது தந்தையுடன் கோவிலுக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது அவர்கள் ஶ்ரீகாலிகாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் வேகமாக வந்த கார் சங்கர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அவர்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சங்கர்க்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து பின் மேல்சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தந்தையுடன் கோவிலுக்கு சென்ற சிறுமி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.