"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இனி 7 நாட்களுக்கு மழைதான்..!!
வங்கக்கடலின் வடமேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும் இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.