திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
9 மாவட்டங்களில் வெளுத்துவாங்க காத்திருக்கும் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்துவரும் நிலையில், இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு சென்னையை பொறுத்தவரையில் நுங்கம்பாக்கம், அண்ணாநகர் மற்றும் வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று (27.08.2023) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.