மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோவில் கைது..!!
தூத்துக்குடியில் முதியவர் ஒருவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் அவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருபவர் சவரிமுத்து (78). இவர் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதனால் பயத்தில் சிறுமி, கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டுள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் தாயார், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் வனிதா வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தார்.
அதில் சிறுமிக்கு சவரிமுத்து பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சவரி முத்துவை கைது செய்தனர். கைதான சவரிமுத்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.