திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாணவிகளிடம் சிலுமிஷம் செய்த ஓவிய ஆசிரியர்.. சுற்றி வளைத்த பெற்றோர்களால் பரபரப்பு..!
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே காரைக்குறிச்சி புதூரில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றி உள்ள பல மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இதே பள்ளியில் ராமமூர்த்தி என்பவர் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராமமூர்த்தி அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனை பற்றி தங்கள் பெற்றோரிடம் குழந்தைகள் தெரியப்படுத்தி உள்ளார்கள். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு வந்துள்ளனர்.
பின்னர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் குழந்தைகளுக்கு ஓவிய ஆசிரியர் கொடுத்த பாலியல் சீண்டல்கள் பற்றி கோபமாக விசாரித்துள்ளனர். இந்நிலையில் மற்ற ஆசிரியர்கள் ஓவிய ஆசிரியரான ராமமூர்த்தியை பள்ளியின் ஒரு வகுப்பறையில் வைத்து பூட்டிவிட்டு புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினரிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை வைத்து பூட்டப்படிருந்த வகுப்பறை கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். இதனாங அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் ஆகியோர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
அதன் பின் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்கள் அதிகாரிகளிடம் ராமமூர்த்தியை ஆசிரியர் பணியில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து அதிகாரிகள் விசாரணைக்கு பின் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்லி பெற்றோர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் அறையில் இருந்த ஆசிரியர் ராமமூர்த்தியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.