மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சி அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை... குற்றவாளிகளுக்கு காவல்துறை வலை வீச்சு.!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து 22 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.
மறுநாள் காலை தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 22 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் காணகிள்ளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வீட்டில் பூட்டை உடைத்து திருடிச் சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.