மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலத்த சூறைகாற்றுடன் கடல் சீற்றம்; 30 அடிக்கு மேல் எழும்பிய அலைகள்; தனுஷ்கோடியில் பதற்றம்..!
தனுஷ்கோடி சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி மற்றும் வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக, மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்புகளுக்கு பின்னால் நின்று சுற்றுலா பயணிகள் கடலை வெடிக்கை பார்த்தனர். 30 அடி உயரத்திற்கு மேல் கடல் அலைகள் எழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.