மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர்ச்சியாக குவிக்கப்படும் போலீசார்!.. தணியுமா பதற்றம்?!.. அச்சத்தில் பொதுமக்கள்..!
கோயம்புத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலைமையில் கமாண்டோ படை உள்பட 4 ஆயிரம் காவல்துறையினர் மாநகராட்சி முழுவதும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரில் இந்து அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையில் தொடர்ந்து சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் கூடுதல் டி.ஜி.பி. தாமரைகண்ணன் அங்கே சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று காலை மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காவல்தூறையின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கோவை மாநகரில் தொடர்ச்சியாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க, நேற்று வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 1,700 காவல்துறையினர் கோவையில் குவிக்கப்பட்டனர். குறிப்பாக சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி மற்றும் தூத்துக்குடிஉள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவல்தூறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தமிழ்நாடு கமாண்டோ படை காவலர்களும் கோவைக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.