திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தேர்வில் காப்பியடித்த மாணவி.. டிசியை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்திய பள்ளி நிர்வாகம்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.!
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 17 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி சமீபத்தில் நடந்த தேர்வில் காப்பி அடித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆசிரியர்கள் தேர்வில் காப்பி அடித்ததாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் டிசியை பெற்றுக் கொள்ளுமாறு மாணவியை வற்புறுத்தி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.