மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயலில் உழுது கொண்டிருந்த டிராக்டர்... தலைகீழாக கவிழ்ந்த சம்பவம்.. விவசாயிக்கு நேர்ந்த துயரம்...!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மலைச்சந்து கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிலோர்மணி (எ) மணிகண்டன். இவர் நேற்று மாலை தனது விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் டிராக்டரின் அடியில் சிக்கிக் கொண்ட மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.