மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்து லாரி டிரைவர்.. பின்பு நடந்த துயர சம்பவம்.!
சென்னை புழல் அருகேயுள்ள மாதவரம் ரெட்டேரியில் ஒரு ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழி சென்ற மக்கள் புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புழல் காவல் துறையினர், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஏரியிலிருந்து உடலை மீட்டனர். இதனையடுத்து அந்த சடலத்தை காவல் துறையினர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ஏரியில் இறந்து கிடந்தவர் கொளத்தூர், பூம்புகார் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்த லாரி டிரைவரான முருகன் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது போதையில் ஏரியில் தவறி விழுந்து இறந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.