35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
நடு ரோட்டில் டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடி கவிழ்ந்த வேன்: டிரைவர் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்..!
தேனி மாவட்டம், பூசாரிகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 பேர் ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் உள்ள நாட்ராயன் நாச்சிமுத்து கோவிலுக்கு சென்று ஆட்டு கிடா வெட்டி குலதெய்வ வழிபாடு செய்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டுச்சென்றனர்.
அந்த வேனை, பூசாரிகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த வீரக்குமார் (32) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே இவர்கள் சென்ற வேன் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக வேனில் பின்பக்க டயர் வெடித்தது.
இதன் காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி நடு ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனரான பூசாரிகவுண்டன்பட்டியைச் சேர்ந்த வீரக்குமார் மற்றும் வேனில் வந்த குணாவதி (52), அருண்குமார் (27), அமுதா (41), போதுமணி(52), பிரியதர்ஷினி (22), சர்வேஸ்வரன் (37), மாலதி (49), ஜெயந்தி (42), சீலமுத்து (54) உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை, அந்த பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சு வாகனம் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார்.