சென்னையில் இந்த ஆண்டின் அதிகமான மழை இன்றுதான்! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை



the wetest day of the year in chennai

சென்னையில் இன்று தான் இந்த ஆண்டில் மிகவும் ஈரமான நாள் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். இன்று சென்னை நகரம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் இந்த மழையானது நாளை காலை வரை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று  பெய்தது போன்றே இன்றும் தொடரும் மழை நாளை காலை வரை நீடிக்கும்  என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவி்த்துள்ளார். 

கடந்த 12 மணிநேரமாக மழை மேகங்கள் சென்னையை விட்டு வெளியேதான் நகராமல் இருக்கின்றன. கடந்த 12 மணிநேரமாக அனைத்து மழைநீரும் கடலில் கொட்டி வீணாகி வருகிறது. இப்போதுதான் கடற்கரைப்பகுதியில் இருந்து மழை மேகங்கள் சென்னைக்குள் நகரத் தொடங்கி இருக்கிறது. இதனால், கிழக்கு கடற்கரைச்சாலை, சிறுசேரி பகுதிகளில் காற்றுபலமாக வீசி மழை பெய்துவருகிறது. சென்னையின் இதர பகுதிகளில் இரவு நேரங்களில் நிதானமாக மழை பெய்யக்கூடும்.

wettest day of chennai

டிசம்பர் மாதம், 2-வது வாரத்தில் நம்முடைய கடற்பகுதிக்கு “எம்ஜேஓ” வரும் என எதிர்பார்க்கிறேன், அதுவரை பொறுத்திருப்போம். அதேசமயம் பற்றாக்குறை பருவமழையை சென்னை தாண்டிவருவது கடினம்தான்.

மேலும் இன்றும், நாளையும்(23-ம்தேதி) “புல் எபெக்ட்” மூலம் நமக்கு மழை கிடைக்கும். அதன் பின் 24-ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதிலும் வறண்ட வானிலையே காணப்படும். 

2007-ம் ஆண்டில் இதுபோலத்தான் சூழல் நிலவியது. ஆனால், அந்த ஆண்டில் டிசம்பர் மாதத்தில் பெய்த மழை நம்மை காப்பாற்றியது. அதுபோல் இந்த ஆண்டும் நடக்கும் என நம்பலாம் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.