மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிகிச்சைக்கு அனுப்பிய மனைவி.. பழிவாங்க எண்ணிய கணவர்... பின்பு நடந்த கொடூர சம்பவம்...!
சென்னையில் உள்ள சூரப்பட்டு அன்னை நகரில் வசித்து வருபவர்கள் வேலாயுதம் - ரேவதி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வேலாயுதம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையான வேலாயுதத்தை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார் அவரது மனைவி ரேவதி. அங்கு சிகிச்சை பெற்று வந்த வேலாயுதம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில் மீண்டும் மதுவுக்கு அடிமையாகி குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் வேலாயுதம். அப்போது மது போதை மறுவாழ்வு மையத்தில் தன்னை சேர்த்ததற்கு பழிவாங்குவதாக கூறி தனது மனைவியை சரமாரியாக தாக்கி சுவரில் தள்ளி உள்ளார். இதில் ரேவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.