மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்.. தீவிர விசாரணையில் போலீஸ்..!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது நிரம்பிய இளைஞர். கூலி தொழிலாளியான அந்த இளைஞருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞருக்கு உறவுக்காரரான சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை அவரை கற்பழித்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடையவே கர்ப்பத்தை கலைப்பதற்காக பல மாத்திரைகளை வாங்கி கொடுத்து முழுங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
மேலும் சிறுமியின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். பின்னர் நடந்தவற்றையெல்லாம் சிறுமி கூறவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.