திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிர்ச்சி..சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. அதிரடி காட்டிய போலீஸ்..!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் முருக்கன்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு ராஜா என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து இந்த செய்தியை அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு உறுப்பினர் ராமு மங்களமேடு காவல் நிலையத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த ராஜா மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது ராஜா தான் என்பது உறுதியானதையடுத்து போலீசார் அவரை போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.