மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாஸ்மாக்கில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையர்கள்.!!
விருதுநகரில் உள்ள நரிக்குடி அருகே வீரசோழன்-மானாசாலை
ஒட்டி ஒரு அரசு டாஸ்மாக் அமைந்துள்ளது. இங்கு சென்ற மே 27 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் கடையில் புகுந்து மர்ம நபர்கள் பணம், மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் வந்துள்ளார். இதனால், அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வீரசோழன் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், கடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. பதிவுகளை பார்த்ததில், டாஸ்மாக்கில் திருட முயன்ற சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள மறவமங்கலம் பகுதியை சேர்ந்த 22 வயது குணசேகரன், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த 19 வயது முகமது யூசுப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளது.