திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எழவு வீட்டில் எழவெடுத்தவர்களுக்குள் ஏழரை.. கத்தியால் சதக்., சதக்., என சொருகியதில் நடந்த பயங்கரம்.!
மூதாட்டியின் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற குடிகாரன்கள் மதுபோதையில் தங்களுக்குள் சண்டையிட்டு கத்தியால் குத்தி கொலைமுயற்சி வழக்கில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர், கருணாக்கமுத்தன்பட்டியில் வசித்து வரும் மூதாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இவரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள மூதாட்டியின் உறவினர்கள் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது, தயாளன் என்பவரின் வீட்டில் ஜெயபாண்டி, உறவினர்கள் தெய்வேந்திரன், சிலம்பரசன் ஆகியோர் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். இதன்போது இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்துள்ளது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மோதவே மூவரும் மோதிக்கொண்டுள்ளனர். இதில், ஆத்திரமடைந்தே தெய்வேந்திரன் ஜெயபாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
கத்திகுத்துடன் இரத்தம் வெளியேறி மயங்கி சரிந்த ஜெயபாண்டியனை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்கெடுத்தாலும் சரக்கு, குடி என்று இருப்போரின் குடிநிலை என்னவாகும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.