ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்த பெண்மணி சரமாரியாக வெட்டி கொடூர கொலை..!
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, கண்டமனூர் பொன்னம்மாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரின் மனைவி சமுத்திரக்கனி (வயது 48). தம்பதிகளுக்கு மகன், 2 மகள்கள் இருக்கின்றனர். பெருமாள் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எய்திவிட்டார். மகனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்தார்.
இதன்பின், மூத்த மகளை சமுத்திரக்கனி பொன்னம்மாள்பட்டியிலும், இரண்டாவது மகளை வருசநாடு அருகேயுள்ள கிராமத்திலும் வரன் பார்த்து திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர் வருசநாடு அருகேயுள்ள காந்திபுரம் பகுதியிலேயே வீடு எடுத்து வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.
பிழைப்புக்காக பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் சமுத்திரக்கனியின் வீட்டு முன் அவர் இரத்த காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார். அவரின் கால், கை, மார்பு ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், காலையில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.