"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
பக்கத்து வீட்டில் கோழி மேய்ந்த விவகாரம் கொலையில் முடிந்த பயங்கரம்; சமாதானம் பேசச்சென்றவர் பரிதாப பலி.!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், காமயகவுண்டன்பட்டி, கூத்தனாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் (வயது 50). இவரின் வீட்டு பின்புறத்தில் வசித்து வருபவர் குமார் (வயது 50). முருகன் கோழிகள் வளர்த்து வந்த நிலையில், அவை குமார் வீட்டிற்கு சென்றதால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு குடும்பத்தினருக்கும் இது தொடர்பாக சண்டை நடந்து வந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் இருதரப்பினர் சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று குமார் கோழியை பிடித்து வைத்துக்கொண்டார்.
இதனால் மீண்டும் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டு, காவல் நிலையம் வரை புகார் சென்றுள்ளது. புகார் விவகாரத்தால் ஆத்திரமடைந்த குமாரின் குடும்பத்தினர், முருகனின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளனர். முருகனுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது.
அச்சமயம் சண்டையை சமாதானம் செய்ய வந்த முருகனின் மைத்துனர் வேலுசாமி (வயது 45), குமாரின் குடும்பத்தினரால் தள்ளவிடப்பட்டார். இதனால் படுகாயமடைந்த அவர் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபின் உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராயப்பன்பட்டி காவல் துறையினர், குமார், அவரது மகன் ரெங்கேஸ்வரன், மருமகன் குணசீலன் (வயது 34), தங்கபாண்டி (வயது 26), பிச்சைமணி (வயது 40), முத்தீஸ்வரி (வயது 27) ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.