குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
#BigNews: ரூ.50 இலட்சத்துடன் ஓ.பி.எஸ் ஆதரவாளரின் கார் ஓட்டுநர் மாயம்.. தேனியில் பரபரப்பு சம்பவம்.. பதற்ற சூழல்.!
ஓ.பன்னீர் செல்வதுடைய ஆதரவாளரின் கார் ஓட்டுநர் ரூ.50 இலட்சம் பணத்துடன் மாயமான சம்பவம் நடந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் வசித்து வருபவர் நாராயணன். இவர் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர் செல்வத்தின் முக்கியமான ஆதரவாளர்களும் ஒருவராக இருக்கும் நாராயணன், பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர். அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார்.
இவரிடம் பெரியகுளம் வடகரையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், உசிலம்பட்டியில் இருந்து ஸ்ரீதர் மற்றும் நாரணாயணன் நண்பரின் ரூ.50 இலட்சம் பணத்துடன் பெரியகுளம் நோக்கி பயணம் செய்துள்ளனர். ஆண்டிபட்டியில் ஸ்ரீதரிடம் நாராயணன் பணத்தை தனது வீட்டில் ஒப்படைக்க கேட்டுக்கொண்டுள்ளார். புறப்பட்ட காருடன் ஸ்ரீதர் ரூ.50 இலட்சத்தோடு மாயமாகவே, அதிர்ச்சியடைந்த நாராயணன் பல இடங்களில் தேடியும் ஸ்ரீதர் காணவில்லை.
இதனையடுத்து, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தனது கணவரை காணவில்லை என்றும், அவரின் செல்போன் கடந்த சில நாட்களாக சுவிட்ச் ஆப் ஆகி இருப்பதால் கணவர் மர்ம மாயம் என்று கூறுவதில் சந்தேகம் இருப்பதாகவும் ஸ்ரீதரின் மனைவி கெங்கம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.