தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#வீடியோ: முரட்டு மீசை, சரக்குக்காக திருட்டு, இங்கிலீஷில் பீட்டர்.. கஞ்சா குடிக்கி அட்ராசிட்டி.!
பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் திருட்டு கைதி காவல் அதிகாரியிடம் அளித்த வாக்குமூல வீடியோ வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபரிடம் காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்போது, கைதி தனது திருட்டு செயலை, வீரதீர சாகசம் செய்ததை போல காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்புக்கொள்கிறார். இந்த வீடியோவை பதிவு செய்த அதிகாரி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக தெரியவருகிறது.
கைதியின் வாக்குமூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள வீடியோவில், "எனது தாத்தா பெயர் ராமசாமி. தந்தை பெயர் பாண்டியன். நேற்று நான் திறந்து கிடந்த வீட்டில் நாய் நுழைந்ததை போல, ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் புகுந்தேன். நான் மதுபானம் அருந்த, அதற்கு தேவையான தண்ணீர் வாங்க பணம் திருட சென்றேன். அவர்களின் வீட்டில் Royal Enfield ரக இருசக்கர வாகனம் இருந்தது.
சாவியோடு வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் எனது கண்களை கவர, அவரது வீட்டிற்குள் செல்லும் போது இருந்த ரம்மியமான அமைதி அமைதி மற்றும் காட்சிகள் என்னை திருட வற்புறுத்தியது. அந்த ஊர் எனக்கு தெரியவில்லை. ஊர் நியாபகம் வந்ததும் கூறுகிறேன். ஆசையை தூண்டும் விதமாக சாவியோடு வாகனம் இருந்தது.
நான் பயத்திற்கே பயம் காண்பிக்கும் அஜித்தின் ரசிகன் என்பதால், இருசக்கர வாகனத்தை திருடி சென்றேன். இருசக்கர வாகனத்தின் செயின் ஆண்டிபட்டி கணவாய் தாண்டி சென்றதும் உள்ள முதல் சோதனை சாவடிக்கு முன்னதாக அறுபட்டுவிட்டது. அதனால் அதனை ஓரமாக நிறுத்தி வைத்துள்ளேன். கஞ்சா வாங்குவதற்காக நான் போடி ரோடு, கோடாங்கிபட்டிக்கு வந்தேன்.
நான் கஞ்சாவுக்கு அடிமையானவன். உதயநிதி ஸ்டாலின், ரவீந்திரநாத் தாகூர், பிரதமர், நிர்மலா சீதாராமன், அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர், ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, முத்துவேல் என்ற மு.க ஸ்டாலின், டி.ஐ.ஜி சைலேந்திர பாபு அவர்களுக்கும், அவர்களின் பணியை பாராட்டி கவிதை எழுதி அனுப்பியிருக்கிறேன்.
I am Not Audit Person, Social Responsibility Person. Today I Know What's Will Today and Every Day. I Will Improve Defiantly. நான் நாளை வருகிறேன். எனது சகோதரர் மேற்கு வங்கம் அருகே இராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். நான் நாளை நமது காவல் நிலையத்திற்கு வருகிறேன்" என்று தெரிவிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.