மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடி போதையில் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகேயுள்ள அப்பியாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (47). இவர் பெருமாநல்லூர் பகுதியிலுள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், வெடித்து சிதறும் வாய்ப்பு உள்ளதால் தனக்கு பயமாக உள்ளது என்றும் தமிழக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து வெடிகுண்டு நிபுணர்களும், காவல்துறையினரும் காளியம்மன் கோவிலுக்கு விரைந்து வந்தனர். பின்னர் துரிதமாக செயல்பட்டு கோவிலில் இருந்த பக்தர்களை வெளியேற்றினர். இதனை தொடர்ந்து கோவிலை சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் அங்கு இல்லை என்பதும், இந்த தகவல் வெறும் மிரட்டல் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொன்டதில் குடி போதையில் வெடிகுண்டு புரளி கிளப்பியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தியது, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தது, பொய்யான தகவலை பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பெருமாநல்லூர் காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.